பயன்பாட்டிற்கு இல்லாத போக்குவரத்து சிக்னல் அகற்றம்
பயன்பாட்டிற்கு இல்லாத போக்குவரத்து சிக்னல் கம்பத்தை நேற்று முழுவதுமாக அகற்றினர்.
புதுச்சேரி-கடலூர் ஈ.சி.ஆரில் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசார் அங்கு சிக்னல் அமைத்து இருந்தனர். இந்தநிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக அபிஷேகப்பாக்கம் பஸ் நிறுத்தம் எதிரே பயன்பாட்டிற்கு வராத போக்குவது சிக்னல் இருந்து வந்தது. மேலும் இந்த சிக்னல் கம்பத்தால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீசார் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வந்த அந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை இன்று முழுவதுமாக அகற்றினர்.
Related Tags :
Next Story