கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 April 2022 11:54 PM IST (Updated: 6 April 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி சவரிராயலு வீதியில் உள்ள அரசு பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய  தகவல் வந்தது. உடனே ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்தவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் சேவியர் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 117 கிராம் (20 பொட்டலங்கள்) கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story