அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
x
தினத்தந்தி 7 April 2022 12:16 AM IST (Updated: 7 April 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3  சதவீத அகவிலைப்படி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை நிதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக புதுவை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியானது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ந்தேதி முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.


Next Story