குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட வரைவு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்


குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட வரைவு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
x
தினத்தந்தி 7 April 2022 2:37 AM IST (Updated: 7 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட வரைவு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து, நாட்டு மக்களைத் திறந்தவெளி கைதிகளாக மாற்ற முயலும் ‘குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு - 2022’யை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

குடிமக்களின் உயிரியல் தகவல்களைத் திரட்டிப் பாதுகாப்பதன் மூலம், மீண்டும் நவீன குற்றப் பரம்பரையினரை உருவாக்க முயலும் பா.ஜ.க. அரசின் செயல் எதேச்சதிகாரப் போக்கின் உச்சமாகும்.

ஆகவே தனிமனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் முற்றாகப் பறிக்கும் வகையில் அடிப்படை அரசியலமைப்பிற்கே எதிராகவுள்ள ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022’ யை ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கப் போராடும் அனைத்து அரசியல் கட்சியினரும், மனித உரிமை அமைப்புகளும், சமூகச்செயற்பாட்டாளர்களும் எதிர்த்துப் போராடி, அதனைத் திரும்பப்பெற செய்ய களத்துக்கு வரவேண்டும் என்று அழைத்து, அறைகூவல் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story