பா.ஜ.க. கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பு - தொண்டர்கள் அதிர்ச்சி
சென்னையில் நடந்த பா.ஜ.க. நிறுவன தின நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை குஷ்பு தலைகீழாக ஏற்றிவைத்தார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை,
பா.ஜ.க. 42-வது நிறுவன தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் நேற்று 2 இடங்களில் பா.ஜ.க. நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்துகொண்டார். இதில் வடக்கு போக் சாலை நரசிம்மன் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை குஷ்பு ஏற்றிவைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கொடியை தலைகீழாக ஏற்றிவைத்து விட்டார்.
கொடியை ஏற்றும்போதே கொடி தலைகீழாக இருப்பதை யாருமே கவனிக்கவில்லை. குஷ்புவும் அதனை கவனிக்க தவறிவிட்டார். கொடியை ஏற்றிவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த சம்பவத்தால் பா.ஜ.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குஷ்பு புறப்பட்டு சென்றதும் நிர்வாகிகள் கொடியை கீழிறக்கி சரிசெய்தனர்.
முன்னதாக குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?
நாட்டுக்கு நல்லது செய்பவர்களுடன் நாம் துணை நிற்கவேண்டும். நாடு வளர்ந்தால் தான் நாமும் வளரமுடியும். ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே பா.ஜ.க. செயலாற்றி கொண்டிருக்கிறது. பா.ஜ.க. என்பது குடும்ப ஆட்சி கிடையாது. மக்களுக்கான ஆட்சி. பா.ஜ.க. கட்சியில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை தான்.
மத்திய நிதி அமைச்சக பரிந்துரையின் பேரில் தான் தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக தி.மு.க.வினர் கூறிவருகிறார்கள். ஒவ்வொரு முறையும் தவறு நடந்துவிட்டால் போதும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கைகாட்டி பேசிவிடுகிறார். ஆனால் தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து அவர் வாயே திறப்பதில்லை. மத்திய அரசு பரிந்துரைத்ததுதான் காரணம் என்றால், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சொத்துவரி உயர்த்தியிருக்க வேண்டுமே... ஆனால் அது நடக்கவில்லையே... தமிழகத்துக்கு மட்டும் என்ன அப்படி விதிவிலக்கு?
உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் விலையேற்றதால் உலக நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி அலுவலகம்
சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று காலை பா.ஜ.க. நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநல பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உரையாற்றிய நிகழ்வை நேரலையாக கமலாலயத்தில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள் பார்த்து ரசித்தனர்.
பா.ஜ.க. நிறுவன தினத்தையொட்டி, கமலாலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்குமே சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

Related Tags :
Next Story