ஈரோடு: போலீசாரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்..!


ஈரோடு: போலீசாரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்..!
x
தினத்தந்தி 7 April 2022 8:55 AM IST (Updated: 7 April 2022 12:20 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அருகே வடமாநில தொழிலாளர்கள் போலீசாரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று இரவு பணியாற்றிக் கொண்டிருந்தபோது மீது லாரியின் பின் பக்க சக்ரம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்காக முயன்றனர். அப்போது அங்கு பணியாற்றும் சக வடமாநில இளைஞர்கள் பிரேதத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயிரிழந்த வட மாநில இளைஞருக்கு 12 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெற்றுக் கொடுப்பதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். வாய் மூலமாக கொடுக்கும் வாக்குறுதி இல்லாமல் காசோலையாகவோ அல்லது முழு தொகையையும் செலுத்தும்படி கேட்டுள்ளனர்.

அதனை தர மறுத்து இறந்தவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும், போலீசாரையும் கடுமையாக தாக்கினர்.

இதில் 7 போலீசார் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்  இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் கலவரமாக மாறியுள்ளது  தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் சசி மோகன் 300க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

Next Story