திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உயிரிழப்பு....!


திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உயிரிழப்பு....!
x
தினத்தந்தி 7 April 2022 9:45 AM IST (Updated: 7 April 2022 9:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்து உள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை மாவட்டம் புதுமவிலங்கை  பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மனைவி காளிகாதேவி (வயது 58). இருவரும் திருவள்ளூர் கண்ணதாசன் நகரில் உள்ள தனது மகள் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளனர். 

பிறகு நேற்று மாலை திருவள்ளூரிலிருந்து புதுமாவிலங்கை கிராமத்திற்கு பஸ் செல்வதற்காக தனது உறவினர் கணேசன் என்பவரது இருசக்கர வாகனத்தில் காளிகாதேவியை பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளார்.  

இவர்கள் உழவர் சந்தை சிக்னல் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காளிகாதேவி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்து உள்ளார். அப்போது லாரியின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காளிகாதேவி உயிரிழந்தார். 

அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கணேசன் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த காளிகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

Next Story