திருநங்கைகளிடம் பணம் கேட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்....!
சென்னையில் திருநங்கைகளிடம் பணம் கேட்டு ரகளை செய்த 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
போரூர்,
சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில் வாலிபர்கள் சிலர் ரகளை செய்வதாக திருநங்கைகள் 2 பேர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது திருநங்கைகள் மற்றும் உடனிருந்த வாலிபரை மிரட்டி பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டது கே.கே நகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஏட்டு முருகன், மாரிமுத்து, நாராயணன், மணிகண்டன் மற்றும் "சீரியஸ் கிரைம்" பிரிவை சேர்ந்த பாண்டியன் மற்றும் குமரன் நகர் போலீஸ் நிலைய ஏட்டு சசிகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பின்னர் 6 பேரிடமும் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஏட்டு சசிகுமார், முருகன் போலீசார் பாண்டியன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story