அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பு


அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பு
x
தினத்தந்தி 7 April 2022 8:44 AM GMT (Updated: 2022-04-07T14:14:45+05:30)

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது 

சென்னை ஐகோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறோம்  என்று அக்கட்சியின் மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார் 

Next Story