தமிழக ஊரகப் பகுதிகளில் 41.76% வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு - நகராட்சி நிர்வாகத்துறை தகவல்
தமிழக ஊரகப் பகுதிகளில் 41.76% வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திரமோடி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.
தரமான குடிநீர் ஒவ்வொரு வீட்டுக்கும் போதிய அளவில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக ஊரகப் பகுதிகளில் 41.76% வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது. எஞ்சிய வீடுகளுக்கு 2024 மார்ச் இறுதிக்குள் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story