சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்டுகிறது. தற்போது தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பணியாளர் தேர்வு வாரியம் என தெரிவித்து இருந்தது.
அதன்படி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தொழில்நெட்பக்கோளாறு காரணமாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் சரிவர இயங்காத காரணத்தால், பெரும்பாலானவர்கள் விண்ணப்பிப்பதில் சிரமப்பட்டனர்.
இதையடுத்து சர்வர் கோளாறு காரணமாக, விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது. இதன்படி, வரும் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story