சொத்து வரி உயர்வு: வரும் 11-ம் தேதி தேமுதிக சார்பில் போராட்டம் - பிரேமலதா விஜயகாந்த்


சொத்து வரி உயர்வு: வரும் 11-ம் தேதி தேமுதிக சார்பில் போராட்டம் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 7 April 2022 6:49 PM IST (Updated: 7 April 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வு மக்களுக்கு தாங்க முடியாத சுமை என்று தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் பிரேமலாதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11ம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. 25% முதல் 50% வரை உயர்த்தலாம் ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களும் தாங்க முடியாத சுமை, ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளது. 

விலைவாசி உயர்ந்துள்ளது, இந்த விலைவாசி உயர்வை நிச்சயமாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசி உயர்வையை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story