ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளியில் தமிழக மாணவர்களும் சேரலாம்


ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளியில்  தமிழக மாணவர்களும் சேரலாம்
x
தினத்தந்தி 7 April 2022 11:11 PM IST (Updated: 7 April 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளியில் தமிழக மாணவர்களும் சேரலாம் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளியில் தமிழக மாணவர்களும் சேரலாம் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்புப்பள்ளி
புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஆனந்தரங்கப்பிள்ளை செவித்திறன் குன்றிய மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள் சிறப்பு பள்ளி 1963-ம் ஆண்டு முதல் பிள்ளைச்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இதில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளும் படித்து வந்தனர்.
பின்னர் இந்த சிறப்பு பள்ளியானது கடந்த 2021 முதல் புதுச்சேரி பகுதியை சேர்ந்த செவித்திறன் குன்றிய மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இப்பள்ளியில் தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள்
இதனை கருத்தில்கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆலோசனைப்படி ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளி முன்பு செயல்பட்டதுபோல் பக்கத்து மாவட்டங்களை (தமிழக மாணவர்கள்) சேர்ந்த வாய் பேச இயலாத, செவித்திறன் குன்றிய மற்றும் பார்வையற்ற குழந்தைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த  செய்திக் குறிப்பில கூறப்பட்டுள்ளது.

Next Story