இலவச கட்டாயக்கல்வி உரிமையின் கீழ்: தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


இலவச கட்டாயக்கல்வி உரிமையின் கீழ்: தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 April 2022 12:36 AM IST (Updated: 8 April 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

இலவச கட்டாயக்கல்வி உரிமையின் கீழ்: தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை தகவல்.

சென்னை,

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12 (1) (சி)-ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதன்படி, 2022-23-ம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வருகிற 13-ந்தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும். பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் சார்ந்த விவரங்களை 18-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

அதனைத்தொடர்ந்து 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் அதன் நுழைவுவாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story