கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் பேரணி
பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மக்கள் நலப்பணியாளர்கள் பேரணி நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை,
காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடந்தது. மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்த இந்த பேரணியில், பொதுச்செயலாளர் புதியவன், பொருளாளர் ரெங்கராஜ் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, தலைமைச் செயலகம் சென்று அங்கு, முதல்-அமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை மனுவை அளிக்க திட்டமிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டது. ஆனால், எழும்பூர் கூவம் சாலை வழியாக வரதராஜபுரம் லாங்க்ஸ் கார்டன் சாலையில் கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றபோது, அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் கூறியதாவது:-
பணி நியமனம் வேண்டும்
அ.தி.மு.க. அரசால் தொடர்ந்து 3 முறை பணி நீக்கம் செய்யப்பட்டு தற்போது 12 ஆண்டுகளாக பணி இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நாங்கள் தவிக்கிறோம். கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தி மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி நியமனமும் அவர்கள் வழங்கவில்லை.
எனவே, கோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். மேலும், ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். அதேபோல், உயிரிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலையும் அரசு வழங்க வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
இதுதொடர்பாக நாங்கள் முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை இங்கேயே காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில், வரதராஜபுரம் லாங்ஸ் கார்டன் சாலையில் போலீசார் அவர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு சாலையிலேயே அமர்ந்து அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story