மதுரை காளியம்மன் கோவில் திருவிழா - உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு


மதுரை காளியம்மன் கோவில் திருவிழா - உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 8 April 2022 1:02 AM IST (Updated: 8 April 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

ரங்கராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது காளை, சிறந்த காளைக்கான பரிசை வென்றது.

மதுரை,

மதுரை மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 485 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 250-க்கும் மேற்ப்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை வென்றார். ரங்கராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது காளை, சிறந்த காளைக்கான பரிசை வென்றது. இதனிடையே இந்த போட்டியில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது.  

Next Story