தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (19-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது.
நேற்று முன்தினம் தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடர், மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர்.
Related Tags :
Next Story