இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தனுஷ்கோடி வருகை..!


இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தனுஷ்கோடி வருகை..!
x
தினத்தந்தி 8 April 2022 8:06 AM IST (Updated: 8 April 2022 8:06 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

தனுஷ்கோடி,

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமுடியாத சூழ்நிலையில், எல்லா விலையும் விண்ணுக்கு எகிறிவிட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சில நாள்களுக்கு முன்பு 2 குடும்பங்களைச்சேர்ந்த 16 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 

இந்த நிலையில் இலங்கையில் இருந்து  மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.

Next Story