வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ கஞ்சா பறிமுதல்...!
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர காவல் படை டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆறுகாட்டுதுறைக்கு ஒரு வேனில் கீற்று ஏற்றி கொண்டிருந்த மினிலாரியை நிறுத்தினர்.
ஆனால் வண்டி நிற்காமால் வேகமாக சென்றது. போலீசார் விடமால் தூரத்தி சென்று சோதனையிட்டதில் அதில் 9 மூட்டைகளில் 270 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
பின்னர், டிரைவர் சுரேசை என்பவரை பிடித்து கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது கஞ்சாவை சுரேஷ் இலங்கைக்கு கடந்த முயன்றது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story