சாமிதோப்பு அய்யா வைண்ட சுவாமி கோவிலில் முத்துக் குடை ஊர்வலம்....!
சாமிதோப்பு அய்யா வைண்ட சுவாமி கோவிலில் முத்துக் குடை ஊர்வலம் தொடங்கியது.
தென்தாமரைகுளம்,
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை தலைமைப்பதியில் முன்பு இருந்து துவங்கியது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் முத்து குடை ஊர்வலம் இன்று காலை துவங்கியது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு தலைமைப்பதியில் முன்பிருந்து முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல தொடர்ந்து காவிக்கொடி பிடித்த அய்யா வழி பக்தர்கள் அணிவகுத்துச் செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது.
Related Tags :
Next Story