குமரி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்....!


குமரி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்....!
x
தினத்தந்தி 8 April 2022 12:38 PM IST (Updated: 8 April 2022 12:38 PM IST)
t-max-icont-min-icon

குமரி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்து உள்ளது.

குமரி,  

திங்கள்சந்தை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து க்குள்ளான சம்பவத்தில் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

குமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரேமலதா(வயது 48). இவர் தனது பேரன் ஷனவ் (2) உடன் ஒரு ஆட்டோவில் திங்கள் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பூச்சாஸ்தான்விளை என்ற இடத்தில் வரும்போது ஆட்டோ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு  உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிறுவன் ஷனவ் தலையின் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை மீட்டு  நெய்யூரில் உள்ள ஓரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஷனவ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இது குறித்து சிறுவனின் பாட்டி பிரேமலதா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆட்டோ டிரைவர் வினுகுமார்(40) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story