தமிழகத்தில் "49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை" - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் "49 லட்சம் பேர் முதல் தவனை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 1 கோடியே 37 லட்சம் பேர் தவனை காலம் முடிந்தும், இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 52 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 49 லட்சத்து மூவாயிரம் பேர் முதல் தவனை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 1.09 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், 12-13 வயதுக்கு உட்பட்டவர்களில் 67.23 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3292 கிராம பஞ்சாயத்துகளிலும், 121 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் கொரோனா மெகா தடுப்பூசி திட்டத்தின் மூலம் மட்டும் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story