சாராய வியாபாரியின் பணத்தை எடுத்த காவலர் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி அருகே சாராய வியாபாரியின் பணத்தை எடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே சாராய வியாபாரியிடம் இருந்து பணத்தை எடுத்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கச்சிராபாளையம் பகுதியில் பிரபல சாராய வியாபாரி மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 50 ஆயிரம் பணத்தை காவலர் ஒருவர் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story