தாம்பரம் ரயில் நிலையத்தில் வெளியேறும் ரசாயன கழிவு நீர் - பொதுமக்கள் அவதி
தாம்பரம் ரயில் நிலையத்தில் வெளியேறும் ரசாயன கழிவுநீரால், குடியிருப்பு பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால், குடியிருப்பு பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே ரசாயன கழிவுநீர் நுரையிடன் தினமும் வெளியேறி வருகிறது. தொடர்ச்சியாக வெளியேறும் ரசாயன கழிவுநீரால், அங்குள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த கழிவுநீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என்றும், உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story