கொரோனா தொற்று காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
கொரோனா தொற்று காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாத விரக்தியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை சரவணம்பட்டி ஜேஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி மகாலட்சுமி மற்றும் மகள் கீர்த்தி (24). இதில் சதாசிவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகாலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கீர்த்தி கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் கல்லூரி தேர்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்த பிறகு கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1 ½ மாதங்களாக துடியலூர் சாலையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கீர்த்திக்கு கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை என்ற மன வருத்தம் இருந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கீர்த்தி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story