அமெரிக்கா கடத்த முயற்சி: நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை பறிமுதல்..!


அமெரிக்கா கடத்த முயற்சி: நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை பறிமுதல்..!
x
தினத்தந்தி 8 April 2022 7:26 PM IST (Updated: 8 April 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 18ம் நூற்றாண்டு நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலையை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பொருட்களில் பழமையான சிலை கடத்தப்படுவதாக சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கர் தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு கும்பகோணத்தில் வாங்கிய சாமி சிலை அனுப்ப இருந்தது. ஆனால் இந்த சாமி சிலைகள் அனுப்ப தேவையான தொல்லியல் துறை தடையில்லா சான்று எதுவும் இல்லை. 

இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து பார்த்த போது நாகபரணத்துடன் சிவலிங்கம் சிலை இருந்தது. பித்தளையால் செய்யப்பட்டு 4 கிலோ 560 கிராம் எடையுடன் இருந்தது. ஆனால் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் கிராமத்தில் ஒருவரிடம் வாங்கியது என தெரியவந்தது. இந்த சிலையை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்த போது 18ம் நூற்றாண்டு காலத்து சிலையாக இருக்கலாம் என தெரிவித்தனர். 

பழமையான சிலையை அமெரிக்காவிற்கு அனுப்ப இருந்தது யார்? இந்த சிலையை கடத்த முயன்றது சர்வதேச கடத்தல் கும்பலாக என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அமெரிக்காவிற்கு அனுப்ப இருந்த சிலையை பறிமுதல் செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story