10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு- 27, 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது

10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு- 27, 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 8 April 2022 10:09 PM IST (Updated: 8 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடக்க உள்ளது.

சென்னை, 

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடக்க உள்ளது. 

இந்த பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அத்தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வு எழுத அறிவிக்கப்படுகிறார்கள்.

அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியில் இருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்க பெறாதவர்கள், இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story