பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் திருமண பதிவு
10 ஆண்டுகளுக்கு பிறகு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் திருமண பதிவு நடந்தது.
10 ஆண்டுகளுக்கு பிறகு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் திருமண பதிவு நடந்தது.
திருமண பதிவு
புதுவை மாநிலத்தில் வருவாய்த்துறையின் கீழ் உள்ள பதிவாளர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகத்தில் திருமண பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திருமண பதிவுகளை மீண்டும் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆணையர் கார்த்திகேயன் செய்தார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு...
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணப்பதிவு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி ஆகியோர் திருமண பதிவை தொடங்கி வைத்து முதல் திருமணம் செய்த மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருமணப் பதிவுகள் கொம்யூன் பஞ்சாயத்திலும் நடக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன 15 நாட்களுக்குள் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உரிய ஆவணங்கள் பெற்று திருமணப்பதிவு உடனுக்குடன் வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story