“ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி விநியோகம்” - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி


“ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி விநியோகம்” - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
x
தினத்தந்தி 8 April 2022 11:06 PM IST (Updated: 8 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். 

கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் ஆறு ஆலைகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். இந்த ஆலைகளின் மூலம் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பாக நெல்லை சேமித்து வைப்பது, தரம் மற்றும் நிறம் குறைந்த அரிசியை தனியாக பிரித்து கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

Next Story