ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மணக்குள விநாயகர் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.
புதுவையில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகிலேயே சிலர் சாலையை ஆக்கிரமித்து பூக்கடைகள், விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைத்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை தொந்தரவு செய்யும் விதமாக இவர்களது நடவடிக்கைகள் இருந்து வந்தன. அதுமட்டுமின்றி கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இடையிலேயே தொழில்போட்டியில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடிக்கடி மோதி கொண்டுள்ளனர்.
இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் இன்று ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போலீசார் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story