“அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம்” - உணவுத்துறை அமைச்சர் தகவல்


“அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம்” - உணவுத்துறை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 9 April 2022 2:53 AM IST (Updated: 9 April 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் நீலகிரி, தர்மபரி ஆகிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கேழ்வரகு வழங்கினால் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்பதால், அரசிக்கு பதிலாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Next Story