ஓரினச் சேர்க்கையில் 2 சிறுவர்களை கொலை செய்த காமக்கொடூரன் கல்லால் அடித்து படுகொலை...!


ஓரினச் சேர்க்கையில் 2 சிறுவர்களை கொலை செய்த காமக்கொடூரன் கல்லால் அடித்து படுகொலை...!
x
தினத்தந்தி 9 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 11:03 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஓரினச் சேர்க்கையில் 2 சிறுவர்களை கொலை செய்த காமக்கொடூரன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சேதராப்பட்டு, 

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மரக்காயர் வீதி கடற்கரையோரம் உள்ள காலி மனையில் இன்று அதிகாலை வாலிபர் சடலம் கிடந்தது. உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த அந்த வாலிபர் குறித்து பொதுமக்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில். கொலை செய்யப்பட்ட வாலிபர் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி மகன் அபினேஷ் (வயது 23) என்பதும். 

தற்போது புதுச்சேரி சோலை நகரில் தந்தை கலைமணி, தாய் வித்யா உடன் வசித்துவந்த அபினேஷ் நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கியும் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
கொலை செய்யப்பட்ட அபினேஷ் மீது 2019-ல் நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரீனேஷ் என்ற சிறுவனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து புதைத்த கொலை வழக்கும், 2020-ம் ஆண்டு அதே நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு கொலை செய்து மண்ணில் புதைத்த காமக்கொடூரன் என்பதும் தெரியவந்தது.

நேற்று இரவு அபினேஷ் யாருடன் மது அருந்த வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் சிறுவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி, அவர்கள் தகவலை வெளியில் சொன்னால் தாக்குவதும் கொலை செய்வதும் அபினேஷ் வாடிக்கையாக இருந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

தற்போது அபினேஷ்  உடலை மீட்டு கனக செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.




Next Story