இந்திய எல்லைக்குள் அத்துமீறிய ஈரான் கப்பல் - சென்னையில் அதிரடி சோதனை!


இந்திய எல்லைக்குள் அத்துமீறிய ஈரான் கப்பல் - சென்னையில் அதிரடி சோதனை!
x
தினத்தந்தி 9 April 2022 9:01 AM GMT (Updated: 9 April 2022 9:01 AM GMT)

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சிறிய ரக கப்பலை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்திய கடல் எல்லை பகுதியில் அந்தமானை ஒட்டியுள்ள இந்திரா பாயிண்ட் என்ற கடல் பகுதியில் அத்துமீறி ஈரான் நாட்டைச் சேர்ந்த சிறிய ரக கப்பல் ஒன்று இந்திய கடற்பரப்பில் நுழைந்ததால் இது குறித்து தகவல் கிடைத்த இந்திய கடலோர காவல் படையினர் சிறிய ரக கப்பலை சுற்றி வளைத்தனர்.

கடற்பரப்பில் சுற்றிவளைத்த ஈரான் சிறிய ரக கப்பலை கடலோர காவல் படையினர் இன்று காலை சென்னை துறைமுகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். ஈரான் நாட்டு கப்பல் சென்னை துறைமுகம் அழைத்து வரப்படும் தகவல் கிடைத்ததால் மாநில உளவுத் துறை, மத்திய உளவுத்துறை இது மட்டுமல்லாமல் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக துறை முகத்தில் குவிக்கப்பட்டனர்.

ஈரான் நாட்டு கப்பலை 11 ஈரான் நாட்டைச் சேர்ந்த நபர்கள் இருப்பது உறுதியானது அவர்களிடம் மத்திய போதைப் பொருள் அதிகாரிகள், கப்பலின் அதிரடியாக சோதனை நடத்தினர் மேலும் 11 ஈரான் நாட்டை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அவர்கள் மீனவர்களா? அல்லது தீவிரவாத கும்பலை சேர்ந்தவரகளா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறிய ரக கப்பல் மூலம் ஈரான் நாட்டிலிருந்து போதை பொருள் கடத்தி வந்திருக்கலாமா என்ற கோணத்திலும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பல் முழுவதுமாக சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story