கோவை: அவசர சிகிச்சை என கூறி பேசுவதற்கு செல்போன் வாங்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்த வாலிபர்கள்..!


கோவை: அவசர சிகிச்சை என கூறி பேசுவதற்கு செல்போன் வாங்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்த வாலிபர்கள்..!
x
தினத்தந்தி 9 April 2022 3:01 PM GMT (Updated: 9 April 2022 3:01 PM GMT)

கோவையில் வாலிபரிடம் போன் வாங்கி தப்பி ஓடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை ,

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகிலுள்ள இடையர்பாளையம் பூம்புகார் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் சில்வர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆலன் டென்னிஸ் (வயது 26) என்பவர் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது 2 வாலிபர்கள் டிப் டாப்பாக  மோட்டார் சைக்கிளில் வந்து தன்னிடம் உள்ள செல் போன்னில் ரீசார்ஜ் தீர்ந்துவிட்டது. அவசர சிகிச்சைக்காக போன் செய்ய வேண்டியுள்ளது என்று கேட்டு ஆலன் டென்னிஸ் என்பவரிடம் போனை வாங்கி போன் பேசுவது போல பேசிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடினர். 

உடனே அருகில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை  விரட்டிச் சென்றனர். அவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் சென்று நான்கு நண்பர்கள் தேடியும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருடுவதில் கூட மனிதாபிமானம் இல்லாமல் திருட்டு சம்பவம் நடப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளுக்கு நம்பரும் இல்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.

Next Story