சமூக அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சமூக அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 11:20 PM IST (Updated: 9 April 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

சமூக அமைப்புகள் சார்பில் புதுவை மிஷன் வீதி மாதா கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் உளவாய்க்கால் சந்திரசேகர் மீது காவல்துறையினர் அடக்குமுறையை    மேற்கொள்வதாகவும்  அதைக்கண்டித்தும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் புதுவை மிஷன் வீதி மாதா கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
நிறுவன தலைவர் உளவாய்க்கால் சந்திரசேகர் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் இளவரசன், அமைப்பு செயலாளர் சரவணன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story