சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துத்துறை திட்டம்


சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துத்துறை திட்டம்
x
தினத்தந்தி 10 April 2022 12:56 AM IST (Updated: 10 April 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை,

புனித வெள்ளி, ஈஸ்டர், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தொடர்ந்து 16 (சனி), 17 (ஞாயிறு) ஆகிய விடுமுறை தொடர்ந்து வருவதால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாகும்.

மேலும் 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயண தேவை அதிகரிக்கும் என்று எதர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன்படி 13-ந் தேதி 500 சிறப்பு பேருந்துகளும் 16-ந் தேதி சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சேவை இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story