அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது...!


அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது...!
x
தினத்தந்தி 10 April 2022 9:45 AM IST (Updated: 10 April 2022 9:45 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருமானூரை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்ராஜ் (வயது 20).  இவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் ஹோம் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

இவர் காமரசவல்லி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்ராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து உள்ளார். 

இதனை அறிந்த சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மோகன்ராஜ் மற்றும் சிறுமியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மோகன்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story