எக்ஸ்இ வகை கொரோனா குறித்து மக்கள் பீதி அடையவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் உருமாறிய எக்ஸ்.ஈ வைரஸ் தொற்று இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருமங்கலம்,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மதுரை வந்தார்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அனீஷ் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், “புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பற்றி மக்கள் பீதி அடைய தேவையில்லை. கொரோனோ வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றார்.
Related Tags :
Next Story