தஞ்சாவூர்: ஸ்ரீ வல்வில் ராமர் கோவில் தேரோட்டம்...!


தஞ்சாவூர்: ஸ்ரீ வல்வில் ராமர் கோவில் தேரோட்டம்...!
x
தினத்தந்தி 10 April 2022 2:15 PM IST (Updated: 10 April 2022 2:06 PM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே ஸ்ரீ வல்வில் ராமர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கபிஸ்தலம்,

தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள பூதங்குடி வல்வில் ராமசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பகல் இரவு என தினமும் பல்லக்கு ,ராஜா அலங்காரம், சொர்ணாபிஷேகம், வெண்ணைத்தாழி, உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. 

இதன் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமசாமி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக பொதுமக்களுக்கு காட்சியளித்து பின்பு தேர் நிலையை வந்தடைந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம், என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story