இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 April 2022 8:21 PM IST (Updated: 10 April 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவே உத்தரவிடப்பட்டது. ஆனால், இங்கு வந்து பார்த்தபோது பொதுக்கூட்டம் மாநாடாகவே காட்சியளிக்கிறது. மக்களோடு மக்களாக நம்மை இணைப்பது இதுபோன்ற பொதுக்கூட்டங்கள்தான்.

எனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய ஊர் செங்கல்பட்டு. திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

மக்களோடு மக்களாக எப்போதும் தன்னை இணைத்துக் கொள்ளும் இயக்கம்தான் திமுக. இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு. தமிழ்நாடு  நம்பர் 1 மாநிலமாக உருவாக நான் மட்டும் உழைத்தால் போதாது, நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதும், கிடைக்க வைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த மரியாதை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story