மளிகை கடையில் சிறுவனோடு விளையாடும் அமைச்சர்


மளிகை கடையில் சிறுவனோடு விளையாடும் அமைச்சர்
x
தினத்தந்தி 10 April 2022 10:29 PM IST (Updated: 10 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

மளிகை கடையில் அமைச்சர் சந்திரபிரியங்கா சிறுவனோடு விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் சந்திரபிரியங்கா. சமீபத்தில் இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் துள்ளல் நடனம் போட்டது சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் தனது சொந்த தொகுதியான நெடுங்காடு பகுதியில் அமைந்துள்ள மளிகை கடைக்கு சென்ற அமைச்சர், கடை உரிமையாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் கடைக்கு சென்றான். கடையில் அமைச்சர் இருப்பதை கண்டு சிறுவனின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். அதற்குள் சிறுவன் சாக்லெட் கேட்க, கடையில் அமைச்சர் இருக்கிறார், போனபிறகு வாங்கி தருகிறேன் என பெற்றோர் கூறினர்.
கடையில் அமைச்சர் ஒன்றும் இல்லை என சிறுவன் கூற, இதை அமைச்சர் சந்திரபிரியங்கா காதில் வாங்கியவாறு, சிறுவனோடு விளையாட தொடங்கினார்.
நான் தான் அமைச்சர், நீ நம்ப மறுக்கிறாயா? வேண்டுமென்றால், நான் தூரமாக சென்று நிற்கிறேன். அமைச்சர் வாங்க என கூப்பிடு நான் உடனே வருகிறேன். அப்போதாவது நீ நம்புகிறாயா, சத்தியமாக நம்புகிறாயா? என அமைச்சர் சிறுவனிடம் கூறுகிறார்.
உடனே சிறுவன் அமைச்சர் இங்க வாங்க என மழலை குரலில் கூற அமைச்சர் சிறுவனிடம் சென்று, பார்த்தாயா நான் தான் அமைச்சர் இப்போதாவது நம்பு  என கூறி,  சிறுவனுக்கு சாக்லெட் எடுத்து கொடுக்கிறார். அமைச்சர் சந்திர பிரியங்கா சிறுவனிடம் வேடிக்கையாக விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story