பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது


பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது
x
தினத்தந்தி 10 April 2022 11:09 PM IST (Updated: 10 April 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு இன்று புதுவையில் 2 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

.பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு இன்று புதுவையில் 2 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
பிரான்ஸ் அதிபர் தேர்தல்
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் 2 சுற்றுகளாக நடக்கிறது. இந்த தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜின் லஸ்ஸால், மரைன்லுபென் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வாக்களிப்பார்கள். புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் 4 ஆயிரத்து 564 பேர் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குப்பதிவு
இந்த நிலையில் முதல் சுற்று தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம், லிசேபிரான்சே பள்ளி ஆகிய 2 வாக்குச்சாவடிகளும், காரைக்கால், சென்னையில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் நீண்ட வரிசையில் இருந்து வாக்களித்தனர். 
முன்னதாக அவர்களது குடியுரிமை அடையாள அட்டையை அங்கிருந்த அதிகாரிகளிடம் காண்பித்தனர். அதனை சரிபார்த்த பின்னரே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது.
இந்த வாக்குச்சாவடி மையங்களை பிரெஞ்சு துணை தூதர் லிசே டல் போர்ட் பரே பார்வையிட்டார். வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் அதிக பெரும்பான்மை பெறவில்லை என்றால் முதல் 2 இடங்களை பிடிப்போருக்கு 2-வது சுற்று தேர்தல் வருகிற 24-ந் தேதி நடைபெறும்.

Next Story