வீச்சரிவாளுடன் ரகளை செய்த 2 பேர் கைது


வீச்சரிவாளுடன் ரகளை செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 11:32 PM IST (Updated: 10 April 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

வீச்சரிவாளுடன் ரகளை செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் வீச்சரிவாளுடன் நின்று கொண்டு இருந்த 2 பேர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். 
விசாரணையில் அவர்கள் நெல்லித்தோப்பு அந்துவான் வீதியை சேர்ந்த குணசீலன் (வயது 26), கொசப்பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story