சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளிய 2 பேர் கைது
சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் கொடுக்கூர் சங்கராபரணி ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாட்டிவண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இருப்பினும் போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கொடுக்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 30), வல்லரசு (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story