மணல் கடத்தல் வழக்கு: கனிம வளத்துறை பெண் அதிகாரி கைது
மணல் கடத்தல் வழக்கு: கனிம வளத்துறை பெண் அதிகாரி கைது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல் எடுப்பதாக கூறி அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்த பகுதியில் பட்டா நிலங்களில் உள்ள மணலை எடுத்து கழுவி நல்ல மணலாக்கி அதை கடத்துவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, மதுரை ஐகோர்ட்டில் கிறிஸ்டி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மணல் கடத்தல் சம்பந்தமான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, எம்.சாண்ட் மணலுக்கு பதிலாக பட்டா நிலத்தில் உள்ள மணலை கடத்தியதாக 25 பேரை கைது செய்தனர். பலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அப்போதைய நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குனர் சபியா (வயது 38) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
சபியா தற்போது நீலகிரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சமீர் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story