மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு


மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 11 April 2022 2:47 AM IST (Updated: 11 April 2022 2:47 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இன்று நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

மதுரை,

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 

முதல் 2 நாட்கள் வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைக்கப்பட உள்ளது. இதனிடையே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story