தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 11 April 2022 3:24 AM IST (Updated: 11 April 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், வத்திராயிருப்பு 12 செ.மீ., கூடலூர் 10 செ.மீ., பேரை யூர், மீமிசல், வைகை அணை தலா 6 செ.மீ., குறிஞ்சிப்பாடி, பில வாக்கல், சோழவந்தான், பெரிய குளம், ஆய்க்குடி, தேக்கடி தலா 5 செ.மீ., விருதுநகர், கோவிலங்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், பட்டுக்கோட்டை, ராஜபாளையம், அரிமளம், நாகர்கோவில் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Next Story