தஞ்சை: 5½ வயது மகனை மீட்டுத்தர கோரி இளம்பெண் கண்ணீர் மல்க புகார்..!
இளம்பெண் தனது 5½ வயது மகனை மீட்டுத்தர வேண்டும் என தஞ்சை கலெக்டரிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் சீதாராமன். இவருடைய மனைவி கீதா (வயது 25). இவர் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கண்ணீருடன், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். எனது பெற்றோர் இறந்து விட்டதால் சேலத்தில் உள்ள எனது வீட்டில் வசித்து வந்தேன். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கோயம்புத்தூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அங்கு வேலை பார்த்த சீத்தாராமனை 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
பின்னர் அவருடைய சொந்த ஊரான கரையூருக்கு வந்து வசித்து வந்தோம். இந்த நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து எனது கணவர் என்னை தனியாக விட்டு விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அங்கு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே நான் சேலம் செல்ல முயன்ற போது, எனது மாமனார், மாமியார் ஆகியோர் எனது மகனை பிடுங்கி வைத்துக்கொண்டனர்.
அவனுக்கு வயது தற்போது 5½ ஆகிறது. எனது மகனை மீட்டுத்தரக்கோரி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மகனை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Related Tags :
Next Story