கடலூர்: மாட்டுவண்டி, சைக்கிளில் வந்து மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மாட்டுவண்டி, சைக்கிளில் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடலூர்,
கடலூர் மாநகராட்சி கூட்டம் இன்று மாமன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக வருகை தந்தனர். அப்போது பா.ம.க. கவுன்சிலர் சரவணன் மாட்டு வண்டியில் வந்து மாநகராட்சி அலுவலகத்தில் வந்து இறங்கினார். அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி கவுன்சிலர்கள் கண்ணன், அருள்பாபு ஆகிய 2 பேரும் சைக்கிளில் வந்து இறங்கினர்.
இதுகுறித்து பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதேபோல் சமையல் கியாஸ் விலை உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாட்டு வண்டியிலும், சைக்கிளிலும் வந்ததாக தெரிவித்தனர்.
இருப்பினும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மாட்டு வண்டி மற்றும் சைக்கிளில் கவுன்சிலர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story