இந்த மாத இறுதியில் நடத்தி முடிக்க திட்டம் 1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் தேதி புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு


இந்த மாத இறுதியில் நடத்தி முடிக்க திட்டம் 1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் தேதி  புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 6:36 PM IST (Updated: 11 April 2022 6:36 PM IST)
t-max-icont-min-icon

புதுவை, காரைக்காலில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி
புதுவை, காரைக்காலில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. 29-ந்தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. 
அதாவது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் பாட தேர்வுகள் 25-ந்தேதியும், ஆங்கில தேர்வுகள் 26-ந்தேதியும் நடக்கிறது. 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை கணித தேர்வுகள் 27-ந்தேதியும், 1,2 -ம் வகுப்புகளுக்கு கணித தேர்வுகள் 29-ந்தேதியும் நடக்கிறது. 
3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 29-ந்தேதி சுற்றுச்சூழல் அறிவியல் பாட தேர்வும் நடக்கிறது.

தேர்வு நேரம்

6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை 25-ந்தேதி மொழிப்பாட தேர்வும், 26-ந்தேதி ஆங்கிலமும், 27-ந்தேதி கணித தேர்வும், 28-ந்தேதி அறிவியல் தேர்வும், 29-ந்தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது. 
1 முதல் 3-ம் வகுப்பு வரை தேர்வுகள் காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரையிலும், 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் தேர்வுகள் நடக்கிறது.
இந்த தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story